மோகன்லாலுக்காக ஹிந்தியில் குரல் கொடுத்த அனுராக் காஷ்யப் | Anurag Kashyap dubs for Mohanlal’s ‘Malaikottai Vaaliban’ Hindi version
[ad_1]
இந்தியில் மோகன்லாலுக்கு அனுராக் காஷ்யப் குரல் கொடுத்தார்
21 ஜனவரி, 2024 – 16:38 IST

மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் மலையாளத்தில் இந்த ஆண்டின் முதல் பெரிய ரிலீஸ் ஆகும். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பாலிசேரி இந்த படத்தை இயக்கியுள்ளார். ராஜஸ்தானை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மோகன்லால் சிறந்த மல்யுத்த வீரராக நடித்துள்ளார்.
இதுவரை நடித்திராத கேரக்டரில் மோகன்லால் நடித்திருப்பதோடு, ரசிகர்கள் இதுவரை பார்த்திராத தோற்றத்திலும் நடித்துள்ளார். இப்படம் மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஹிந்தி பதிப்பில் மோகன்லாலுக்கு பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் டப்பிங் பேசியிருக்கிறார்.
தென்னிந்திய மொழி படங்களில் எப்போதும் அதிக ஆர்வம் காட்டும் அனுராக் காஷ்யப், மலைக்கோட்டை வாலிபன் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் டப்பிங் செய்ததற்காக நடிகர் மோகன்லால் சமீபத்தில் ஒரு விளம்பர நிகழ்வில் பாராட்டினார்.
[ad_2]