ரசிகர்களுடன் விஜய் மீண்டும் ‘செல்ஃபி’ சந்திப்பு @ புதுச்சேரி
[ad_1]
புதுச்சேரி: அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ரசிகர்கள் சந்திப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 2ம் தேதி வெளியானது.இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நேற்று (பிப்.4) தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள விஜய், தனது ரசிகர்களை நெஞ்சில் வாழும் தோழர்கள் என குறிப்பிட்டுள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று (பிப்.4) புதுச்சேரி-கடலூர் சாலையில் AFT பாஞ்சாலையில் படப்பிடிப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது படப்பிடிப்பு நடந்தது. AFT பஞ்சால் முன் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர். நெரிசல் அதிகரித்ததால், பஸ்கள் அப்பகுதியில் செல்லாமல், திரும்பிச் செல்ல துவங்கின. அப்போது ஏஎஃப்டி வாயிலில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறி ரசிகர்களை கை அசைத்தார் விஜய். அப்போது அவர் மீது மலர்வளையம் வீசப்பட்டது. அதை அணிந்து கொண்டு விஜய் ரசிகர்களிடம் கொடுத்து விட்டு சென்றார்.
அதேபோல் இன்று வேனில் ரசிகர்களை சந்தித்த விஜய், தனது செல்போனை எடுத்து அதில் செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக, நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்த அன்றே ரசிகர்களை கை அசைத்தார். அரசியல் அறிவிப்புக்கு பிறகு 3 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
[ad_2]