cinema

ரஜினியின் ‘வேட்டையன்’ புதிய போஸ்டர் திங்கள்கிழமை வெளியீடு 

[ad_1]

சென்னை: ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டர் நாளை (ஜன.15) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது 170வது படமான இதில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும் நடைபெற்றது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் இது தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை காலை 9.15 மணிக்கு வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *