ராஜமவுலி படத்தில் இந்தோனேஷிய நடிகை!
[ad_1]
ஹைதராபாத்: ‘RRR’ படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவை ஹீரோவாக இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமௌலி. ‘இந்தியானா ஜோன்ஸ்’ பாணியில் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இந்தப் படம் இருக்கும் என்றும், உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கதை நடப்பதாக இருக்கும் என்றும் ராஜமௌலி ஏற்கனவே கூறியிருந்தார். 3 பாகங்களாக உருவாகும் இந்தப் படம் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை செல்சி இலான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவருக்கு டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. அவருடன் தீபிகா படுகோனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
[ad_2]