ராமர் கோவிலுக்கு ஹனுமானின் கைங்கர்யம் | Hanuman movie team donate to Ram temple
[ad_1]
ராமர் கோவிலுக்கு அனுமனின் கைங்கர்யம்
10 ஜனவரி, 2024 – 15:40 IST
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஹனு மான். இதில் தேஜா சஜ்ஜா, வரலக்ஷ்மி சரத்குமார், அம்ரிதா ஐயர், வினய் ராய் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் கதைப்படி, ராமரின் தீவிர பக்தரான அனுமனின் சக்தி கொண்ட ஒரு இளைஞன் மக்களுக்காக போராடுகிறான். அனுமன் தொடர்பான இந்தப் படத்தின் மூலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கும், கும்பாபிஷேக விழாவின்போதும் உதவ படக்குழு முன்வந்துள்ளது. இதன்படி படம் பார்க்க விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஐந்து ரூபாய் ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.
‘ஹனுமான்’ படக்குழுவை திரையுலகினர் மட்டுமின்றி ஆன்மீக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
[ad_2]