ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம்! அதிரடி சட்டம் வெளியிட்ட மத்திய அரசு!! | 3 ஆண்டுகள் சிறை, 1 லட்சம் அபராதம்: நடிகை ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வரிசைக்குப் பிறகு மையத்தின் நினைவூட்டல் – NewsTamila.com
[ad_1]
ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம்! அதிரடி சட்டம் வெளியிட்ட மத்திய அரசு!!
08 நவம்பர், 2023 – 13:52 IST
ராஷ்மிகா மந்தனாவின் ஹாட் போலி வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஷரா பட்டேலின் முகத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து போலி வீடியோவை வெளியிட்டு வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா மந்தனா வேதனை தெரிவித்தார். இது தவிர பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உட்பட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுபோன்ற போலி வீடியோக்களை வெளியிட்டால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, மத்திய அரசு அதிரடி சட்டம் பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, போலி வீடியோ குறித்து புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்தில் அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
[ad_2]