cinema

ரொமான்டிக் காமெடி கதையில் மஹத், ஐஸ்வர்யா தத்தா

[ad_1]

சென்னை: நடிகர் மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா முக்கிய வேடங்களில் நடிக்கும் படத்திற்கு ‘கெட்டவன்னு பேர் நல்லவன்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வர்ணாலயா சினி கிரியேஷன்ஸின் கீழ் ஃபேவின்ஸ் பால் தயாரித்த காதல் நகைச்சுவைத் திரைப்படம் இது.

பிரபுராம். சே இயக்கியுள்ளார். சாக்ஷி அகர்வால், யோபாபு, ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஆதவ் சசி, ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர். பாடல்களுக்கு தரண்குமார் இசையமைக்க, பின்னணி இசை கார்த்திக் கிருஷ்ணா.

“மஹத் வட சென்னையைச் சேர்ந்த கேரக்டரில் நடித்துள்ளார். ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியிருந்தாலும், படத்தில் சில உணர்ச்சிகரமான தருணங்கள் உள்ளன. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *