லால் சலாம் தெலுங்கு, ரஜினிக்குக் குரல் கொடுத்துள்ள சாய்குமார் | Saikumar has voiced Rajini for Lal Salaam Telugu
[ad_1]
‘லால் சலாம்’ தெலுங்கில் ரஜினிக்கு குரல் கொடுத்துள்ளார் சாய்குமார்
08 பிப்ரவரி, 2024 – 18:09 IST
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ரஜினியின் லால் சலாம் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நாளை வெளியாகிறது. நடிகர் சாய்குமார் தெலுங்கில் ரஜினிகாந்துக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
கடந்த பல படங்களில் ரஜினியின் பின்னணி பாடகர் மனோ தெலுங்கில் டப்பிங் பேசி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் அவருக்கு பதிலாக சாய்குமார் பேசியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிக்காக சாய்குமார் பேசியுள்ளார். தெலுங்கில் இதற்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்தராயுடு, பாட்ஷா’ ஆகிய படங்களுக்கு இவர் டப்பிங் செய்து பேசினார். இந்த மாற்றம் ரஜினி ரசிகர்களுக்கு என்ன மாதிரியான அனுபவத்தை கொடுக்கும் என்பது நாளை படம் வெளியாகும் போது தெரியும்.
[ad_2]