“விஜயகாந்த் மகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரெடி” – ராகவா லாரன்ஸ் பகிர்வு
[ad_1]
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படங்களில் சிறப்பு வேடங்களில் நடிக்க தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: நேற்று முன்தினம் விஜயகாந்த் சமாதிக்கு சென்றேன். அங்கிருந்து அவர் வீட்டுக்குச் சென்றோம். பேசிக்கொண்டே விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை சுட்டிக்காட்டி, ‘அண்ணன் ஹீரோவாக நடிக்கிறார். விஜயகாந்தின் அக்கா, அவரை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். அந்த வார்த்தை என் மனதில் ஒரு மாதிரியை உருவாக்கியது. விஜயகாந்த் பல நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார். பல கெஸ்ட் ரோல்களில் நடித்துள்ளார்.
அதனால் இவ்வளவு உதவி செய்தவரின் குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. சண்முகபாண்டியன் படம் வெளியாகும் போது அந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கொடுக்க வேண்டும். அதை பிரபலப்படுத்த வேண்டும். நான் அதை செய்ய என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அதுமட்டுமின்றி, டீம் ஒப்புக்கொண்டால், படத்தில் ஒரு கேமியோ ரோலில் – அது ஸ்டண்ட் அல்லது பாடலாக – நான் நடிப்பேன்.
சண்முகபாண்டியனும் நானும் சேர்ந்து நடிக்கிற மாதிரி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்தாலும் அவருடன்தான் நடிப்பேன். அரசியலில் களமிறங்கும் விஜயபிரபாகரனுக்கு எனது வாழ்த்துகள்” என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.
கேப்டன் சாரின் மகன் சண்முக பாண்டியன் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை விஜயகாந்த் சார் மீது எனக்குள்ள மரியாதை மற்றும் அன்பாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். pic.twitter.com/zIlNBqnVs2
— ராகவா லாரன்ஸ் (@offl_Lawrence) ஜனவரி 10, 2024
[ad_2]