விஜயசாந்தி மீண்டும் கட்சி மாறுவார் விஜயசாந்தி மீண்டும் கட்சி மாறுவார் – NewsTamila.com
[ad_1]
விஜயசாந்தி மீண்டும் கட்சி மாறுவார்
03 நவம்பர், 2023 – 14:13 IST
தென்னிந்திய சினிமாவின் அதிரடி கதாநாயகியாக இருந்தவர் விஜயசாந்தி. 1997ல் பா.ஜ.,வில் சேர்ந்தார்.அதன் பின், அக்கட்சியில் இருந்து விலகி, 2009ல், பாரத ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் போட்டியிட்டு, எம்.பி.,யானார். அதன்பிறகு, தெலுங்கானா தனி மாநிலம் ஆனதும், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார் விஜயசாந்தி.
அதன் பிறகு அக்கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், தெலுங்கானாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பா.ஜ.,வில் போட்டியிட சீட் கிடைக்காததால், அக்கட்சியில் இருந்து விலகி, மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘பாரத ராஷ்டிர சமிதியிடம் இருந்து தெலுங்கானா மக்களை காப்பாற்ற காங்கிரஸ் போராட வேண்டும்’ என விஜயசாந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ad_2]