cinema

விஜய்க்கு தங்கையாகும் பிரபல ஒளிப்பதிவாளர் மகள் | Daughter of a famous cinematographer who is Vijays younger sister

[ad_1]

விஜய்யின் தங்கையான பிரபல ஒளிப்பதிவாளரின் மகள்

03 பிப்ரவரி, 2024 – 16:06 IST

எழுத்துரு அளவு:


பிரபல ஒளிப்பதிவாளர்-விஜய்-யின் மகள் - இளைய சகோதரி

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா என பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க இருப்பதாகவும், இவானா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கிசுகிசு பரவியது. ஆனால், அவர் இந்த வேடத்தில் நடிக்கவில்லை. இதில் தங்கையாக நடிக்க பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இவர் பரதநாட்டிய நடனத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *