cinema

விஜய் ஆண்டனி படத்தில் நடிக்க மறுத்த நடிகை: இயக்குனர் தகவல் | Actress who refused to act in Vijay Antony film: Director informs

[ad_1]

விஜய் ஆண்டனி படத்தில் நடிக்க மறுத்த நடிகை: இயக்குனர் தகவல்

19 ஜனவரி, 2024 – 14:58 IST

எழுத்துரு அளவு:


விஜய்-ஆண்டனி படத்தில் நடிக்க மறுத்த நடிகை: இயக்குநர் தகவல்

விஜய் ஆண்டனி ‘ஹிட்லர்’ படத்தை முடித்துள்ளார். இதில் அவருடன் ரியா சுமன், கவுதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைக்க, நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். செஞ்சூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா மற்றும் சஞ்சய் குமார் தயாரித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் தானா கூறியதாவது: ஹிட்லர் என்றாலே சர்வாதிகாரம் தான் நினைவுக்கு வருகிறது. ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு நாட்டில் சர்வாதிகாரம் நடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறான். இவற்றை எதிர்த்துப் போராடும் ஒரு சாமானியனின் கதை இது. இந்தப் படத்தில் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் பெண்ணாக ரியா சுமன் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் சாரா. முதலில் சாரா கேரக்டருக்கு இன்னொரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு நடிக்க ஆரம்பித்தார். பின்னர் நடிக்க மறுத்துவிட்டு வெளியேறினார். அவர் தனது சொந்த காரணங்களுக்காக வெளியேறினார். அவர் யார், ஏன் என்று சொல்வது நாகரீகம் அல்ல. அதன் பிறகுதான் ரியா சுமனை அணுகி கேட்டோம். உடனே சம்மதித்து இரண்டு நாட்களில் படப்பிடிப்பிற்கு தயாராகிவிட்டார். நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார். கூறினார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *