cinema

“வெறுப்பை நாம் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்?” – லட்சத்தீவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாலிவுட் பிரபலங்கள்

[ad_1]

புது தில்லி: மாலத்தீவு அமைச்சர் ஒருவரின் சர்ச்சைக்குரிய ட்வீட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல பிரபலங்கள் லட்சத்தீவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

இது குறித்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மாலத்தீவை சேர்ந்த பிரபல பொது நபர்கள் இந்தியர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்புவதை நான் பார்த்திருக்கிறேன். அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டிலேயே இதைச் செய்ய முடியும் என்பது ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் அவர்களுக்கு நல்லவர்கள். ஆனால் இப்படிப்பட்ட வெறுப்பை நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதன் அழகை ரசித்திருக்கிறேன். ஆனால், கண்ணியம் மிக முக்கியம். இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்.

ஜான் ஆபிரகாம் தனது இணையதளத்தில் மாலத்தீவுக்கு எதிராக லட்சத்தீவுகளை பாராட்டினார். “அற்புதமான இந்திய விருந்தோம்பல், லட்சத்தீவு கடலின் பரந்த நிலப்பரப்பை அனுபவிக்கும் இடம்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை ஷ்ரத்தா கபூர், “எனது விடுமுறை நாட்களை லட்சத்தீவில் அழகிய கடற்கரைகள் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்துடன் கழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் சல்மான் கான் பேசுகையில், “லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பது மிகவும் அற்புதமானது. அதில் சிறந்த அம்சம் என்னவென்றால், அது இந்தியாவில் உள்ளது.

இதில் சச்சின் டெல்டுல்கரும் இணைந்துள்ளார். “சிந்துதுர்க் பகுதியில் எனது 50வது பிறந்தநாளை கொண்டாடி 250 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த கடல் நகரம் நாம் கேட்பதை விட அதிகமாக கொடுக்கிறது. அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகான இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை நமக்கு விட்டுச் செல்கின்றன. இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகான தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சரின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 2ம் தேதி லட்சத்தீவு சென்றிருந்தார். இது சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக கருதப்பட்டது. எக்ஸ் தளத்தில் தனது பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மோடி, “லட்சத்தீவு வெறும் தீவுகளின் தொகுப்பு அல்ல. இது காலங்காலமாக நிலைத்து நிற்கும் பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு ஒரு சான்றாகும். எனது பயணம் கற்றுக் கொள்ளவும் வளரவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

லட்சத்தீவின் மூச்சடைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கரவட்டி ஆகிய இடங்களில் உள்ள மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”

பிரதமரின் பயணம் குறித்து கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், மாலத்தீவுகளை இந்தியா குறிவைப்பதாகவும், மாலத்தீவு கடற்கரை சுற்றுலாவுக்கு போட்டியாக இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இது நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பலர் மாலத்தீவுக்கு மாற்று சுற்றுலா தலமாக லட்சத்தீவுகளை பரிந்துரைத்தனர். மேலும் பலர் மாலத்தீவு பயணத்தையும் ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *