ஷைன் டாம் சாக்கோ நிச்சயதார்த்தம்
[ad_1]
கொச்சின்: பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ தமிழில் விஜய்யின் ‘மிருகம்’, கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆரின் பான் இந்தியா படமான ‘தேவரா பார்ட் 1’, மலையாளத்தில் ‘நடிகர் திலகம்’, ‘தங்கமணி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஷைன் டாம் சாக்கோவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பிரபல மாடல் அழகி தனுஜாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவித்ததையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 1ம் தேதி கேரளாவில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
[ad_2]