100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த நேர் | Ner joins 100 crore collection club
[ad_1]
100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது ‘நேர்’
15 ஜனவரி, 2024 – 17:52 IST

கடந்த ஆண்டு இறுதியில் மலையாளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘நேர்’. காரணம், தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் இந்தப் படம் உருவானது. மேலும், படத்தின் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் நீதிமன்ற அறையில் அமைக்கப்பட்டன.
மோகன்லால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு சாமர்த்தியமாக வழக்காடும் வழக்கறிஞராகவும், பிரியாமணி அவருக்கு எதிராக வாதிடும் வக்கீலாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பு குறையாமல் இயக்கியிருக்கிறார் ஜீத்து ஜோசப். இப்படம் வெளியானது முதல் தொடர்ந்து வசூல் செய்து வரும் நிலையில், தற்போது 25வது நாளில் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
[ad_2]