cinema

1461 நாட்கள் காதலில்… ரஜிஷா விஜயன் காதலர் தகவல்… | 1461 days in love… Rajisha Vijayan Valentine information…

[ad_1]

1461 நாட்கள் காதலில்… ரஜிஷா விஜயன் காதலர் தகவல்…

06 பிப்ரவரி, 2024 – 18:37 IST

எழுத்துரு அளவு:


1461-நாட்கள்-காதல்...-ரஜிஷா-விஜயன்-காதலர்-தகவல்...

காதலர்களுக்கு பல விஷயங்கள், பல நினைவுகள் உண்டு… காதலிக்கும் நாட்களை இந்த அளவுக்கு யாராவது எண்ணுகிறார்களா என்று நடிகை ரஜிஷா விஜயனின் காதலர் டோபின் தாமஸ் கேட்டுள்ளார்.

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அதன் பிறகு தமிழில் ‘ஜெய் பீம், சர்தார்’ படங்களில் நடித்தார். இவரும் மலையாள படங்களின் ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸும் காதலித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு, டோபின் தாமஸ் ரஜிஷாவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு, “1461 நாட்கள்… சூரியனைச் சுற்றி மற்றொரு பயணத்தை எண்ணுகிறேன். நிறைய காதல், சிரிப்பு, மற்றும் இருவரின் விந்தைகள்…” என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ரஜிஷா விஜயன், “1461 = 30 x ? + 1 x? – 1 x ? – 2 x ?….முடிவற்ற காதல்…” எமோஜிகளுடன்.

காதலர்களுக்கு ரசிகர்களும் மலையாள திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *