32 வயதாகியும் திருமணம் செய்யாத ஓவியா.. அதற்கு சொன்ன காரணம்
[ad_1]
நடிகை ஓவியா களவாணி, கலகலப்பு, மத யானை கூட்டம், முனி 4 என பல படங்களில் நடித்தவர் ஓவியா. படங்களில் நடிப்பதை விட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா மீண்டும் ஹீரோயினாக வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் நடித்த 90எம்எல் திரைப்படம் அவரது கேரியரை காலி செய்துவிட்டது என்றே கூறலாம்.
அதன் பிறகு ஓவியா குறைந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
திருமணம் எப்போது?
சமீபத்தில் ஒரு பேட்டியில் ஓவியாவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. “நான் இப்போது தனிமையில் இருக்கிறேன், மகிழ்ச்சியாக இருக்க எனக்கு இன்னொருவர் தேவையில்லை என்று நினைக்கிறேன்.”
“கல்யாணம் சரியான நேரத்தில் நடக்க வேண்டும். அதன் பின் நாம் செல்லக் கூடாது. நடந்தால் பரவாயில்லை, நடக்கவில்லை என்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.”
நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை, தனியாக இருப்பது பிடிக்கும் என ஓவியா கூறியுள்ளார்.
[ad_2]