“4 வருடங்கள் இடைவெளி வேண்டாம் என்றனர்” – ‘கம்பேக்’ குறித்து ஷாருக்கான் நெகிழ்ச்சி
[ad_1]
மும்பை: “4 வருடங்கள் இடைவெளி எடுக்காதீர்கள். 4 மாதம் பரவாயில்லை என்று ரசிகர்கள் என்னை நெகிழ்ச்சியடையச் செய்தனர் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “படம் சரியாக வந்திருக்கிறது என்று நீங்கள் நம்பினாலும், உங்களுக்குள் கொஞ்சம் பதட்டம் இருக்கும். என்னுடைய முந்தைய படங்கள் சரியாகப் போகாததால் நல்ல படங்களை எடுக்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் எனது படங்களை விட ‘பதான்’, ‘ஜவான்’, ‘டன்கி’ ஆகிய படங்களை மக்கள் அதிகம் விரும்பினார்கள் என்று நினைக்கிறேன்.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள மக்கள் “4 வருடங்கள் இடைவெளி எடுக்காதீர்கள். “4 மாசம் பரவாயில்லை” என்று என்னை மகிழ்வித்தார்கள். எனவே, நான் செய்வது சரி என்றும், அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் எனக்கு உணர்த்தியதற்கு உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.”
ஷாருக்கான் மறுபிரவேசம்: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் வெளியானது. தொடர்ந்து, செப்டம்பரில் ‘ஜவான்’, டிசம்பரில் ‘டங்கி’ என ஒரே ஆண்டில் 3 படங்களை வெளியிட்டார். முதல் 2 படங்களும் ரூ 1000 கோடியை தாண்டியது. ‘டங்கி’ ரூ.500 கோடியைத் தாண்டியது. ஷாருக்கானின் இந்த ‘கம்பேக்’ அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இவரது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]