45 வயதில் அந்த ஆசை இன்னமும் இருக்கு ஆனா…! மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்… நடிகை நக்மா ஓபன் டாக்…!!!
[ad_1]
நடிகை நக்மா
90ஸ் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. இவர் காதலன் என்ற படத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவரின் வாட்டசாட்டமான தோற்றம், சுண்டி இழுக்கும் முக அழகு என கவர்ச்சி நடிகையாக இருந்த நக்மாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த்துடன் ஜோடியாக பாட்ஷா திரைப்படத்தில் நடித்து, மிக பிரபலமடைந்தார்.
இத்தனை வயதாகியும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை நக்மாவிற்கு ஜாதகம், ஜோதிடம் உள்ளிட்ட விஷயங்களில் அதிக நம்பிக்கை உண்டு. இந்நிலையில் அவரின் ஜாதக அமைப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இடையில், அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலரை கல்யாணம் செய்ய முயற்சி எடுத்தும், அவை எதுவும் கை கூடாமல் போனதாக தெரிகிறது.
நடிகை பேட்டி
ஜோதிகாவின் சகோதிரியான இவருக்கு, தற்போது 45 வயதாகிறது. இந்நிலையில் நடிகை நக்மா சமீபத்திய பேட்டி ஒன்றில், அவரின் திருமண ஆசை குறித்தும், திருமணத்தின் மீதான எதிர்பார்ப்பு குறித்தும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதில் அவர், “எனக்கு திருமணம் செய்யவேக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை எனவும் திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என வாழ்வதற்கு ஆசை இருக்கிறது எனவும் கூறியுள்ளார். இருந்தாலும் திருமணம் செய்துகொள்ளாமல் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன், ஆனால் கல்யாணம் ஏதும் நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு அந்த பேட்டியில் நக்மா கூறியுள்ளார்.
[ad_2]