5 மொழிகளில் வெளியாகும் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’
[ad_1]
கொச்சின்: மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். இதில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லீஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். செஹ்நாத் ஜலால் ஒளிப்பதிவு செய்ய கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.
“இது கேரள மண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருக்கும். திகில் படமாக இருந்தாலும் மம்முட்டி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களுக்கும் இது ஒரு பெரிய விருந்தாக இருக்கும். இதை ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக மாற்ற தயாரிப்பாளர்களும் ஆர்வமாக உள்ளனர்” என்கிறார் இயக்குனர். இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[ad_2]