மென்மையான சருமத்தை பெற – NewsTamila.com
[ad_1]
* முதலில் உங்கள் தோல் வகையை அறிந்து கொள்ளுங்கள். சரியான தோல் பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்யவும். உங்கள் தோல் வகை என்னவென்று உறுதியாக தெரியவில்லையா? பரவாயில்லை. ஆரோக்கியமான சருமத்திற்கு ஆழமான சுத்திகரிப்பு கிரீம்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் தோலில் ஏதேனும் கிரீம் ஒவ்வாமை உள்ளதா என்பதைப் பார்க்க முதலில் உங்கள் முழங்கையில் ஒரு சிறிய அளவு தடவி, நாள் முழுவதும் அதை அப்படியே விட்டு விடுங்கள். மதுவுடன் கலக்காதீர்கள். பாதிப்பு இல்லை என்றால் பரவாயில்லை.
* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், ஆல்கஹால் கொண்ட கிரீம்களை தவிர்ப்பது நல்லது. “ஆல்கஹால்” உடலில் இருந்து வியர்வையை அகற்றும். ஆல்கஹால் கொண்ட கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் உள்ள வியர்வை சுரப்பிகளை அடைத்துவிடும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், நீங்கள் பயன்படுத்தும் க்ரீமில் என்னென்ன ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்பதை வாங்கும் முன் பரிசீலித்து கொள்வது நல்லது.
* கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அந்த பகுதி மென்மையானது மற்றும் உணர்திறன் கொண்டது. தோல் தொய்வு மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைப் போக்க சில ஜெல் அடிப்படையிலான கிரீம்கள் உள்ளன. இவை கண்களுக்குக் கீழே உள்ள சுருக்கங்களைக் குறைக்கலாம் அல்லது தற்காலிகமாக நீக்கலாம்.
* பகலில் தோலில் ஏற்படும் பாதிப்புகள் இரவில் நிவாரணம் பெற வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில், இரவில் சிறந்த கிரீம்களைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
* முகத்தில் சூரிய ஒளி படுவதால் அதிக சுருக்கங்களும், வயதான தோற்றமும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சூரியனில் இருந்து வரும் ‘அல்ட்ரா வயலட்’ கதிர்கள் சருமத்தில் உள்ள நார்ச்சத்தை குறைத்து, சருமத்தில் எரிச்சல் மற்றும் உரிப்பை ஏற்படுத்தும். எனவே உதடுகளை பாதுகாக்கவும், வெயிலில் இருந்து முகத்தை மறைக்கவும் லிப் க்ரீம் மற்றும் லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துவது நல்லது.
* இது போன்ற சரும க்ரீம்களைப் பயன்படுத்துவதற்கு முன் தோல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உங்கள் தோல் வகை என்ன என்பதை அவர்களால் உங்களுக்குச் சொல்ல முடியும் மற்றும் அதற்கேற்ப கிரீம்களை பரிந்துரைக்க முடியும்.
– பூர்ணிமா
[ad_2]