health

இயற்கை உணவு ஆரோக்கியமான உணவு! – NewsTamila.com

[ad_1]

சிக்கிமில் கரிம வேளாண்மை

இயற்கை உணவே ஆரோக்கியமானது என இயற்கை வேளாண்மையாளர் வரதராஜன் தெரிவித்தார்.

சுவாதி தலைமையில் சுஷ்மிதா, தமிழரசி, சூரியபிரபா, தமிழ்ச்செல்வி, வி.உள்பட 21 மாணவிகள் கிராமத்தில் தங்கி ஒருவாரம் பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் பயிற்சிக்காக களம் இறங்கி விவசாயிகளுடன் உரையாடி வருகின்றனர். களப் பயிற்சியின் ஒரு பகுதியாக வயல்களில் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியை திங்கள்கிழமை பெற்றனர். நம்மாழ்வார் விருதுபெற்ற வரதராஜன், இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நல்ல ஆரோக்கியமான இயற்கை உணவு தானியங்களை பயிரிட்டு விற்பனை செய்வது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமாக உள்ளது. பல்வேறு நோய்களில் இருந்து மக்களை காக்காத இயற்கை விவசாயம் குறித்து தமிழக அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முதற்கட்டமாக அரசு மருத்துவமனை, அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இயற்கை அரிசி உள்ளிட்ட தானியங்களை பயன்படுத்தி சமைத்த உணவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் உணவே மருந்து என்பதை மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்றார் வரதராஜன்.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்… தினமணியின் வாட்ஸ்அப் செய்தி சேவையில் இணையுங்கள்…
வாட்ஸ்அப்பில் தினமணி சேனல்: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *