health

உங்கள் பற்கள் பிரகாசமாக இருக்க 15 பயனுள்ள குறிப்புகள்! – NewsTamila.com

[ad_1]

புன்னகை

  1. ஆரோக்கியமான பற்களை பராமரிக்க, சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
  2. இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
  3. கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த வெண்ணெய், கொய்யா, பழம், பால் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.
  4. ஆரோக்கியமான ஈறுகளுக்கு வைட்டமின் சி நிறைந்த பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.
  5. தொடர்ந்து இரண்டு முறை பல் துலக்கினால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதன் மூலம் நாக்கை நன்றாக சுத்தம் செய்யவும்.
  6. உங்கள் பற்களை சுத்தம் செய்ய சரியான வழிமுறைகளை பின்பற்றவும். இல்லையெனில் தேய்மானம் ஏற்படும்.
  7. காபி மற்றும் மதுவை அதிகமாக உட்கொள்வது உடலில் கால்சியம் அளவைக் குறைத்து, பல் மற்றும் ஈறு சிதைவை ஏற்படுத்தும்.
  8. ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் பற்களில் வலி ஏற்பட்டால், உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அணுகவும்.
  9. பல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட பற்பசை மற்றும் தூரிகையைப் பயன்படுத்தவும்.
  10. பற்களை சாப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு அல்லாத பொருட்களைக் கடித்தால் பல் இழப்பு ஏற்படும்.
  11. உங்களுக்கு ஏதேனும் மருத்துவ குறைபாடுகள் இருந்தால் பல் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  12. புகையிலையை தவிர்த்தால் வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
  13. சூயிங்கம் பயன்படுத்துவதால் பற்கள் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படும்.
  14. இரவில் பல் கடித்தல் அல்லது குறட்டை விடுவது போன்ற பழக்கம் இருந்தால் உடனே தீர்வு காணுங்கள். உங்கள் அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகவும்.
  15. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பல் பரிசோதனை செய்து கொள்வது பல் சொத்தை மற்றும் ஈறு நோயைத் தடுக்க உதவும்.

– டாக்டர் அனுலேகா / டாக்டர் ஜனனி / டாக்டர் சிவா
மொபைல் எண் – 9500100008

முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்… தினமணியின் வாட்ஸ்அப் செய்தி சேவையில் இணையுங்கள்…
வாட்ஸ்அப்பில் தினமணி சேனல்: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *