health

காசநோயை குணப்படுத்தும் ஆரோக்கியமான சூப் – NewsTamila.com

[ad_1]

கீரை_கூத்து

பொன்னாங்கண்ணிக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணிக் கீரை – 2 கட்டு
தக்காளி – 2
வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
சீரகம், மிளகு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
வெண்ணெய் – 50 கிராம்
மைதா மாவு – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

செய்முறை

  • முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையைக் கழுவி பொடியாக நறுக்கவும்.
  • தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
  • அகலமான பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • வெண்ணெய் நன்றாக உருகியதும், அதனுடன் பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும், பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீரை, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.
  • பின் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டவும்.
  • இறுதியாக, ஒரு கடாயில் சிறிது வெண்ணெய் உருக்கி மைதா மாவு தூவி. சிறிது சிவந்ததும் வடிகட்டிய சூப்பை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பலன்கள் – இந்த சூப் நாள்பட்ட இருமல், தாழ்வெப்பநிலை மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற ஒரு உன்னதமான சூப் ஆகும்.

கோவை பாலா
இயற்கை மருத்துவ ஆலோசகர் மற்றும் மூலிகை மருத்துவர்.
செல் : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *