மருந்து, மாத்திரை இல்லாமல் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இயற்கை முறை! – NewsTamila.com
[ad_1]
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரஸ்ஸர் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதவர்கள் இப்போது அரிதாகிவிட்டனர். இரத்த அழுத்தத்தைச் சமன் செய்ய, பிரஸ்ஸர் மாத்திரைகளை தினமும் எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் இயற்கையான முறையில் ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஏதேனும் வழி இருந்தால், தினசரி ஆலிவ் இலைச் சாறு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டதாக மருத்துவக் குழுவினர் தங்கள் 8 வார தொடர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த மருத்துவர்கள் தற்போது பரிந்துரைக்கும் கேப்டோபிரிலுடன் ஒப்பிடுகையில், சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை 12 புள்ளிகள் வரை குறைப்பதில் ஆலிவ் இலை சாறு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறிப்பு:
இரத்த அழுத்தம் என்பது தூய இரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தின் அளவு. உயர் இரத்த அழுத்தம் என்பது இதயத்தால் வெளியேற்றப்படும் இரத்தம் தமனிகள் எனப்படும் தூய இரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு நிலை. இது இரண்டு எண்களில் குறிக்கப்படுகிறது. ஒன்று சிஸ்டாலிக் இரத்த அழுத்தம். இது மேலே உள்ள எண்ணைக் குறிக்கிறது. அடுத்தது டயஸ்டாலிக் இரத்த அழுத்தம். இது கீழே உள்ள எண்ணைக் குறிக்கிறது. உதாரணமாக மருத்துவர்கள் 120/80 மிமீ எச்ஜி என்று எழுதுவார்கள். இது ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம்.
ஒரு சாதாரண மனித இரத்த அழுத்தம் 120/80 ஆகும். இந்த இரத்த அழுத்தம் 140/90 ஆக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தம் என்று குறிப்பிடப்படுகிறது.
செய்தி உடனடி… வாட்ஸ்அப் சேனலில் ‘தினமணி’யை பின்தொடரவும்…
[ad_2]