‘மார்டல் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அதிகரிக்க வேண்டும்’ – NewsTamila.com
[ad_1]
வாய் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மறைந்த திரைப்பட நடிகர் ஜெய்சங்கரின் மகன் சங்கர நேத்ராலயா கண் மருத்துவர் டாக்டர் ஜெ. விஜயசங்கர் கூறினார்.
ரத்தினமங்கலம் தாகூர் பல் மருத்துவக் கல்லூரி வாய் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சைத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிலரங்கைத் தொடக்கி வைத்து அவர் பேசியது: தற்போது மருத்துவம் படிக்கும் மாணவர்கள் நேரடியாகவும், காணொலிக் காட்சி மூலமாகவும் நடைமுறைப் பயிற்சித் திறனை மேம்படுத்த வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மாணவர்கள் குழு உணர்வோடு ஒருங்கிணைந்து மருத்துவ பயிற்சி அறிவை மேம்படுத்த வேண்டும்.
வாய் புற்றுநோய், சாலை விபத்துக்களால் வாய், தாடை, முகம் போன்ற பாதிப்புகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் சாலை விபத்துகளே இதற்குக் காரணம். இந்நிலையில், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார் விஜயசங்கர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள பல் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 460 மாணவ, மாணவியர் பயிலரங்கில் பங்கேற்றனர். பயிலரங்கில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தலைவர் டாக்டர் நல்லாளன், செயலர் எஸ்.ராம்குமார், தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன், துணை முதல்வர்கள் எஸ்.பாலகோபால், சி.ஜே.வெங்கடகிருஷ்ணன் துறைத் தலைவர் எஸ்.ஜிம்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி உடனடி… வாட்ஸ்அப் சேனலில் ‘தினமணி’யை பின்தொடரவும்…
[ad_2]