முள்ளங்கியின் 5 முக்கிய நன்மைகள் – NewsTamila.com
[ad_1]
முள்ளங்கி பலருக்கு பிடிக்காது. ஆனால் முள்ளங்கி பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மருத்துவ மூலிகை. இதில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த விலையில்லா முள்ளங்கியின் நன்மைகளைப் பாருங்கள்.
- முள்ளங்கியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மாவுச்சத்து நன்றாக ஜீரணமாகும். கொழுப்பும் நன்றாக ஜீரணமாகும். இது தவிர ரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேர்வதை முள்ளங்கி தடுக்கிறது.
- முள்ளங்கி சாறு மூல நோயை குணப்படுத்தும். சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி பூரண நிவாரணம் அளிக்கிறது. முள்ளங்கியை நன்கு கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டி குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரையும்.
- தொண்டை வலி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை முள்ளங்கி தீர்க்க வல்லது.
- முள்ளங்கியில் உள்ள கந்தகச் சத்து பித்தத்தை சிறப்பாகச் சுரக்க உதவுகிறது. கல்லீரல் பிரச்சனைகளும் குணமாகும்.
- முள்ளங்கி சாறு எடுத்து காலையில் குடித்து வந்தால் குரல் வளம் பெறும். பேச்சு தெளிவாக வெளிப்படும்.
முள்ளங்கியில் இன்னும் பல நன்மைகள் உள்ளன. உணவில் முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மருத்துவமனை இருக்கும் திசையை கும்பிடலாம்.
[ad_2]