வெற்றி ரன்களை எப்படி சேர்ப்பது? – சாரித் அசலங்கா விவரித்தார் – Newstamila.com
[ad_1]
கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான 252 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஒரு கட்டத்தில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்து இலங்கை வலுவாக இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்த நிலையில், வெற்றிக்கு 42 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அந்த நிலையில் இலங்கை திடீரென சரிவை சந்தித்தது. குஷால் மெண்டிஸ் (91), தசன் ஷனக (2), தனஞ்சய டி சில்வா (5), துனித் வெல்லலகே (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். எனினும் சகலதுறை ஆட்டக்காரர் சரித் அசலங்கா நம்பிக்கையுடன் விளையாடினார். வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் அறிமுக வீரர் ஜமான் கான் வீசினார். முதல் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 3வது பந்தில் பிரமோத் மதுஷன் (1) ரன் அவுட் ஆனார்.
[ad_2]