Sports

ENG vs NZ 3வது ODI | இங்கிலாந்து 181 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! – Newstamila.com

[ad_1]

லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார்.

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் டிராவில் முடிந்தது. பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று 3வது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்கள் எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் 124 பந்துகளில் 182 ரன்கள் எடுத்தார். மாலன் 96 ரன்கள் எடுத்தார்.

369 ரன்கள் இலக்கை நியூசிலாந்து துரத்தியது. அந்த அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் மற்றும் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஸ்டோக்ஸ் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *