Sports

ODI WC 2023 | இன்று வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதுகின்றன

[ad_1]

புது தில்லி: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது. இந்த தொடரில் இலங்கை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அதேநேரம், வங்கதேச அணி 7 போட்டிகளில் 1 வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக போட்டியில் இருந்து வெளியேறியது. இலங்கை அணி கிட்டத்தட்ட போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது. இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெறுவதையும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியையும் பொறுத்தே உள்ளது.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *