முகத்தில் சிரிப்புடன் கெத்தாக லாரி ஓட்டும் பெண்: வைரல் வீடியோ
[ad_1]
பெண்கள் இன்று தரையிலிருந்து வான்வெளி வரை பல்வேறு வாகனங்களை தைரியமாக செலுத்தி வருகின்றன. அந்த வகையில் லாரி ஓட்டிச் செல்லும் பெண் ஒருவரது வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அப்பெண்ணின் வீடியோவை பிரபலங்கள், அதிகாரிகள் என பலரும் பகிர்ந்திருந்தனர். அந்த வீடியோவில் தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஒன்றை பெண் ஒருவர் எளிதாக செலுத்துகிறார். தன்னை வீடியோ எடுத்த நபரை நோக்கி புன்முறுவல் செய்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார். சில நொடிகளிலேயே அந்த வீடியோ முடிவு பெறுகிறது.
இந்த நிலையில், இவ்வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சத்தீஸ்கரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் “ஓட்டுநர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் லாரிக்கு எந்த வேறுபாடும் தெரிவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
ट्रक को इससे क्या मतलब कि चलाने वाला ‘पुरुष’ है या ‘महिला.’ pic.twitter.com/g9IEAocv7p
— Awanish Sharan (@AwanishSharan) July 17, 2022
நெட்டிசன்கள் பாராட்டு: ஒரு லாரியின் சராசரி எடை 7.5 டன் முதல் தொடங்கிறது. அதாவது 7,000 கிலோ என வைத்து கொள்ளுங்கள்.இப்பெண் எவ்வளவு எளிதாக இந்த லாரியை செலுத்துகிறார் என்று அவரது தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டினர்.
இன்னும் சிலர் பயிற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு இப்பெண் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
[ad_2]